Muththa Pichchai Lyrics – Gautham Vasudev Menon
Muththa Pichchai Lyrics
முத்தப் பிச்சை கேட்டு தினம், பித்தன்போல சுத்த வைத்தாள்!, ரத்தம் மொத்தம் காயவிட்டு, பத்தாம் நாள் இதழ் வைத்தாள்!, என் வாயெல்லாம், மின்சாரத்தைப் பாய்த்திட வைத்தாள், எனைக் கேட்காமல், அவ்வுதடுகள் நான்கையும் தைத்தாள், வரிவரியாக – ஹே, இதழ் ரசித்தாளே!, இதழ் வழியாக – ஹே, என் உயிர் ருசித்தாளே!.
தீ விதைத்ததும் நீதானே, மனதை சிதைத்ததும் நீதானே, கீழ் உதட்டில் உன் பல்வெட்டை, ஹே விட்டுச் சென்றதும் நீதானே, அன்று அலையவிட்டாய்!, இன்று அலையடித்தாய்!.
இரு முலைமுனையில், எனைச் செதுக்குகிறாய், இந்த இரண்டு மூக்குகள், உரசி பார்க்குது!, இரண்டு நாக்குகள், வாயில் பேசுது! உன்னாலே!.
முத்தப் பொருத்தமே போதாதா?, அந்த பத்துப் பொருத்தங்கள் வீண்தானே!, ஐந்து கேலரி எரிக்குமமெனில், மற்ற உடற் பயிற்சிகள் வீண்தானே!, ஒரு கலவிக்கு முன், முத்தம் நெருப்பூட்டும், அந்த கலவிக்குப் பின், முத்தம் தாலாட்டும், ஒரு மிருகம் என்னை நீ, மனிதனாக்கினாய் , அழுத்தம் கூட்டியே, கடவுள் ஆக்கினாய்! முத்தத்தால்.
Song Credits
Song: Muththa Pichchai
Artist: Gautham Vasudev Menon
Lyricist: Madhan Karky
Musician: Nakul Abhyankar
Label: Ondraga